மீன்கள் விலை குறைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு - அதிரடி முடிவு எடுத்த மீனவர்கள்!
Rameswaram fishermen strike today reduction fish prices
ராமேஸ்வரத்தில் வாரம் 3 நாட்களில் 800-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று வருவதால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
மீனவர்கள் ஒவ்வொரு முறை கடலுக்கு சென்று வரும்பொழுதும் பலரக மீன்கள் கிடைக்கும். மீன்களை டன் கணக்கில் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து அதனை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு குறைந்த விலை தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மீனவர்கள் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது.
எனவே ஏற்றுமதி நிறுவனங்களிடம் விலையை உயர்த்தி தகர்க்கோரி மீனவர்கள் வலியுறுத்தினர். ஆனால் அதனை ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் நஷ்டம் ஏற்ப்படுவதாக தெரிவித்து இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து ராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார கடற்கரை பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசை பாடல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் மீன்பிடி தொழிலை சேர்ந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இது தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவிக்கையில், 'ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது 30 ஆயிரம் வரை செலவாகிறது.
ஒரு கிலோ இறால் மீன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.40 க்கு வாங்கிய வியாபாரிகள் தற்போது அதனை ரூ. 20க்கு கேட்கின்றனர்.
இது போன்று பலரக மீன்கள் குறைந்த விலையில் கேட்கப்படுவதால் மீனவர்களுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்படுகிறது. கடலுக்கு சென்று வரும் வருமானம் கூட இல்லை. இதனால் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.
English Summary
Rameswaram fishermen strike today reduction fish prices