வசூல்ராஜா வேலையை செய்யும் இந்து சமய அறநிலைத்துறை - கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற கிளை!  - Seithipunal
Seithipunal


இந்து சமய அறநிலைத்துறை "ஒன்லி வசூல்ராஜா எம்பிபிஎஸ்" வேலையை மட்டுமே செய்வதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. 

கோவில்களை இந்து சமய அறநிலைத்துறை முறையாக பராமரிப்பது இல்லை என்றும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவிலின் காலிப்பணி இடங்களை முழுமையாக நிரப்பி, பூஜைகள் உள்ளிட்ட பணிகளை முழுமையாக நடைபெற வலியுறுத்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், சென்னை வேங்கைவாசல் பகுதியை சேர்ந்தவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அவரின் அந்த மனுவில், ராமேஸ்வரம் கோவில் மிகவும் பழமை வாய்ந்த புகழ்பெற்ற ஒரு கோவில். இந்த கோவிலில் பன்னிரண்டு குருக்களும், 19 உதவி குருக்களும் பணியில் இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது இரண்டு குருக்களும், 7 உதவி குருக்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். பல கோடி பக்தர்கள் வருகின்ற இந்த கோவிலுக்கு, ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. 

ஆனால் கோவில் பராமரிப்பு பணியில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் போதிய கவனம் செலுத்துவதில்லை. இந்த கோவிலை பொறுத்த வரை 42 பணியிடங்கள் காலி பணியிடங்களாக உள்ளது.

கோவிலின் பல சன்னதிகளில் குருக்கள் இல்லாததால் பூஜைகள் நடைபெறாமல் உள்ளது. எனவே இந்த காலி பண்ண இடங்களை முழுமையாக பூர்த்தி செய்து, பூஜை உள்ளிட்ட பணிகளை சரிவர செய்து, கோவில் பராமரிப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், இந்து சமய அறநிலைத்துறை கோவில்களை சரியாக பராமரிப்பது இல்லை. வசூல்ராஜா எம்பிபிஎஸ் வேலையை மட்டுமே செய்கிறது என்று கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், மனுதாரரின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க கோரி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rameswaram Temple issue Chennai HC Division Condemn


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->