ராணிப்பேட்டை: ஆவின் பால் விநியோகம் திடீர் நிறுத்தம்.. மக்கள் அவதி!
ranipet aavin milk demand
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் ஆவின் பால் விநியோகம் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாயினர்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆவின் நிறுவனத்தின் வேலூர் கிளை மூலமாக பால் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தினமும் பல மணி நேரம் தாமதமாக பால் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, இன்று முதல் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து 22 விநியோக வாகனங்கள் இயக்கப்பட்டு நிலையில், இன்று ஒரு வாகனம் கூட இயக்கப்படவில்லை.
வேலூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தங்களது சொந்த வாகனங்களைக் கொண்டு பால் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஒரு வாகனம் கூட இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் அனைவரும் பால் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாயினர்.
மேலும், பொதுமக்கள் அனைவரும் தனியார் பால் நிறுவனங்களை தேடி சென்றதால் தனியார் பால் விலை அதிகரித்து விற்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
ranipet aavin milk demand