எலி மருந்து : தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவன உரிமம் ரத்து!...எலி மருந்து நெடியில் குழந்தைகள் பலியான சம்பவத்தில் அதிரடி நடவடிக்கை!
Rat medicine license of private pest control company revoked action taken in case of children death due to rat medicine
சென்னை குன்றத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிரிதரன் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் அதிக எலி தொல்லை இருந்ததால், எலி மருந்து வாங்கி வீட்டின் பல்வேறு பகுதிகளில் வைத்துள்ளார்.
மேலும், கதவுகளை பூட்டிக்கொண்டு கிரிதரன், அவரின் மனைவி பவித்ரா, இரண்டு குழந்தைகள் ஏசியை ஆன் செய்து விட்டு தூங்கி உள்ளனர். எலிமருந்து நெடி வீடு முழுவதும் பரவியதில் சிறுமி வைஷ்ணவி மற்றும் ஒரு வயது குழந்தை சாய் சுதர்சன் இருவரும் மூச்சு திணறி உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவன உரிமத்தை அம்பத்தூர் வேளாண்துறை அதிகாரிகள் ரத்து செய்து உள்ளனர்.
மேலும், எலி மருந்தினை வீட்டிற்கு வெளியே தான் வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், விதி மீறி வீட்டிற்குள் எலி மருந்தினை வைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி, தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவன உரிமத்தை ரத்து செய்துள்ளனர். மேலும், அந்த நிறுவனத்திற்கு இரண்டு நாட்களில் சீல் வைக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Rat medicine license of private pest control company revoked action taken in case of children death due to rat medicine