பொங்கல் பரிசுத்தொகுப்பை எந்த ரேஷன் கடையிலும் வாங்க முடியுமா.? அதிகாரி கொடுத்த தகவல்.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பரிசு தொகை மற்றும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு தமிழக மக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. அதுபோல இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புகள் குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியது.

அந்த அறிவிப்பில் அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 பணமும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை உள்ளிட்டவையும் வழங்கப்படுவதாக தெரிவித்து இருந்தது.

இத்தகைய நிலையில், இந்த பொங்கல் பரிசு தொகையை ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாமா என்ற தகவல் மற்றும் சந்தேகம் பரவி வருகின்றது. 

இது பற்றி தற்போது உணவு பழங்கள் துறை அதிகாரி ஒருவர் அழைத்துள்ள விளக்கத்தில், "எந்த ரேஷன் கடையிலும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று அனுமதித்தால் அதில் நிறைய முறைகேடுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படும். எனவே அந்தந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகளில் மட்டுமே பொங்கல் பரிசு தொகை வாங்க முடியும்." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ration officer about Pongal parisu In All Ration shop


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->