#BREAKING : தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு.! - Seithipunal
Seithipunal


ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 14% லிருந்து 28% ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும், ஏற்கனவே, ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வை 14% லிருந்து 28% ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1-ஆஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் 22,510 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என்றும் இதனால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.73 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அகவிலைப்படி உயர்வு கோரி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அரசு தற்போது இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே தமிழக அரசு ஊழியர்கள் போன்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ration shop employees in Tamil Nadu get increased in price


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->