ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லையா? தமிழக அரசு புதிய உத்தரவு.!
Ration shop new rules
நியாய விலைக் கடைகளில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் பொருட்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைதாரரின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
போலி ரேஷன் அட்டைகளை களையும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பல புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், குடும்ப அட்டைதாரர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களாக நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்கவில்லை என்றால், பணியாளர்கள் அந்த குடும்ப அட்டையின் முகவரியை சோதனை செய்து அதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியாயவிலைக் கடைகளில் பொருட்களை பெரும் போது, சம்பந்தப்பட்ட அட்டைதாரர் பொருட்களை வாங்கவில்லை என்பது உறுதி செய்யப்படுமேயானால், நியாய விலைக்கடை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருட்களை வாங்கும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும், என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.