தமிழக ரேஷன் கடைகளின் மது விற்பனை செய்ய அனுமதி வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Ration shop Tasmac Chennai HC
தமிழகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகளில் மது விற்பனையை செய்ய அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், ஐடி ஊழியர் முரளிதரன் என்பவர் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்,
தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் டாஸ்மாக்கிற்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், டாஸ்மார்க் நிர்வாகம் சில குறிப்பிட்ட மதுபானங்களை மட்டுமே விற்பனை செய்து வருவதாகவும் முரளிதரன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் முரளிதரன் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
முரளிதரன் தாக்கல் செய்துள்ள இந்த மனு குறித்து நாளை, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Ration shop Tasmac Chennai HC