தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி - ஆர்.பி உதயகுமார் பரபரப்பு பேச்சு.!
rb uthayakumar say eps iron man of tamilnadu
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக நடைபெற்றதாக தகவல்கள் வெளியானதையடுத்து அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்தார்.
இந்த நிலையில், கட்சிக் கூட்டத்தில் அமித்ஷாவை புகழ்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ளதாவது:-
"இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக பார்க்கப்படும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, இரண்டு மணிநேரத்துக்கு மேலாக பேசியிருப்பது பற்றி பல கருத்துகள் எழுந்துள்ளன. ஆனால், தமிழகத்தின் நலனுக்காக அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.
இருமொழிக் கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் சந்திப்பின் காரணம் என்ன என்பதை திண்ணை பிரசாரம் மூலமாக அ.தி.மு.க.வினர் எடுத்துச் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
rb uthayakumar say eps iron man of tamilnadu