ஜூன் 20ல் பிரதமர் மோடி சென்னை வருகை - காரணம் வெளியிட்ட ரயில்வே துறை!! - Seithipunal
Seithipunal



மக்களவைத் தேர்தல் முடிந்து பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இதையடுத்து இத்தாலியில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்க இத்தாலி சென்றுள்ளார் பிரதமர் மோடி. 3ஆவது முறையாக பதவியேற்ற பின் இதுவே அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் மோடி ஜூன் 20 அன்று சென்னை வருகை தர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் பிரதமரின் சென்னை வருகை அனைவருக்கும் கேள்வியை எழுப்பி உள்ளது. 

வந்தே பாரத் உள்ளிட்ட ரயில் சேவை திட்டங்களை தொடங்கி வைக்கவே பிரதமர் சென்னை வருகிறார் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது, "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கவே பிரதமர் சென்னை வருகிறார்.

 

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இதையடுத்து பேசின் பாலம் யார்டில் பணிமனை அமைக்க அடிக்கல் நாட்டவுள்ளார்.

மேலும் இரண்டு இரட்டைப் பாதை திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த இரண்டு திட்டங்களையும் பிரதமர் காணொளி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். 

பிரதமர் வருகைக்காக சென்னையில் உள்ள அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது" என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reason For PM Modis Chennai Visit On June 20


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->