4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
Red alert 4 districts
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை இன்று விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு வீடுகளிலும் மழைநீர் புகுந்ததுள்ளது. மேலும் பல்வேறு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பாபநாசம், சேர்வளாறு உள்ளிட அணைகளின் பாதுகாப்பு கருதி இன்று பிற்பகல் தாமிரவருணி ஆற்றில் 15000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பதால் 30,000 கன அடி தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே கரையோரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.