கீழடி அகழாய்வு - முதுமக்கள் தாழியில் கிடைத்த சிவப்பு மணிகள்.! - Seithipunal
Seithipunal


கீழடி அகழாய்வு - முதுமக்கள் தாழியில் கிடைத்த சிவப்பு மணிகள்.!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் மத்திய, மாநில அரசுகளின் மூலம் ஏற்கனவே எட்டு கட்டங்களாக தொல்லியல் அகழாய்வு நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

அவற்றில் பெரும்பாலானவை கீழடி அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கீழடி மற்றும் அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதிலும், ஏராளமான பொருட்கள், அகழாய்வு குழிகளை தோண்டும்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஒன்பதாம் கட்ட அகழாய்வின் போது கார்னிலியன் கல் வகையை சார்ந்த இரண்டு உயர்வகை சிவப்பு கல்மணிகள் முதுமக்கள் தாழிக்குள் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது, கண்டுபிடிக்கப்பட்ட மணியானது அலை, அலையான வரி வடிவத்துடன் வேலைப்பாடுகளுடன் கிடைத்துள்ளது. இந்த மணியின் நீளம் 1.4 செ.மீ., மற்றும் அதன் விட்டம் 2 செ.மீ. ஆக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

red stone found in keezhadi excavation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->