6வயது சிறுமியை கொடுமைப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த அத்தை-மாமா.. 10 ஆண்டுகள் சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவரை அவருடைய தாய் கைவிட்ட நிலையில் தந்தை, பாட்டி ஆகியோர் பராமரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு தந்தை, பாட்டி ஆகியோர் இறந்த நிலையில், சிறுமியை அவரது அத்தை, சென்னை தி.நகரில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்து சென்று வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியை அவரது மாமா தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் அத்தையிடம் தெரிவித்தும், அவர் கண்டுகொள்ளவில்லை. இருவரும் சேர்ந்து சிறுமியை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து அந்த சிறுமி, அவருடைய மற்றொரு உறவினரிடம் தெரிவித்தார். அவர்கள், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் அத்தை, மாமா இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 இந்த நிலையில், சிறுமியின் மாமாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அவரது மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Relative sexual Harrasment to 6 year's old girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->