கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்துவ மதபோதகர் தலைமறைவு; தேடுதல் வேட்டையில் போலீசார்..!
Religious preacher sexually abused girls in Coimbatore is absconding police on the hunt
மதபோதகர் ஒருவர் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். தலைமறைவான இவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள பிரார்த்தனை கூடத்தின் மதபோதகர் 37 வயதான ஜான் ஜெபராஜ். இவர் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன், தனது வீட்டில் விருந்து ஒன்றை நடத்தியுள்ளார். அதில் இவரது மாமனார் தத்து எடுத்த, 17 வயது சிறுமி மற்றும், அவரது அண்டை வீட்டு 14 வயது சிறுமியும் உடன் வந்திருந்துள்ளனர். குறித்த விருந்தின் போது இந்த இரு சிறுமிகளுக்கும், ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அத்துடன், தொடர்ந்து சிறுமிகளிடம் இதுகுறித்து யாரிடமும் கூற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில், 14 வயது சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்த்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில், தலை மறைவாக உள்ள ஜான் ஜெபராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
Religious preacher sexually abused girls in Coimbatore is absconding police on the hunt