ஈரோடு அருகே வீடு தீப்பிடித்து எரிந்து விபத்து - ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி உடல் கருகி பலி...! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை நரிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி சங்கமேஸ்வரன்(82). இவரது மனைவி சரஸ்வதி(66). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சங்கமேஸ்வரன் ஓட்டு வீட்டிலும், மற்றவர்கள் அருகே இருந்த வீட்டிலும் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது திடீரென சங்கமேஸ்வரன் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டு வீட்டில் தீப்பிடித்துள்ளது . இதையடுத்து வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் சங்கமேஸ்வரன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து உடல் கருகிய சங்கமேஸ்வரனின் உடலை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Retired agriculture officer burnt to death in house fire in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->