ஆடுகளுக்கு இலை பறித்த போது மின்சாரம் தாக்கி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் பலி.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடுகளுக்கு இலை பறித்த போது மின்சாரம் தாக்கி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் சூசை மிக்கேல் (67). இவர் 4 ஆண்டுகளாக வீட்டில் ஆடு வளரத்து வந்தார்.

இந்நிலையில் ஆட்டிற்கு தழை போடுவதற்காக வீட்டின் அருகே உள்ள பலாமரத்தில் சூசைமிக்கேல் இலை பறித்துள்ளார். அப்பொழுது மேலே சென்ற மின்கம்பி எதிர்பாராத விதமாக இவர் பறித்துக்கொண்டிருந்த கிளை மீது உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதையடுத்து சூசைமிக்கேலை உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சூசை மிக்கால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சூசைமிக்கேலின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் குளச்சல் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Retired transport worker dies electrocuted in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->