வெளுத்து வாங்கும் கனமழை -  மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சமீப நாட்களாகவே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியினால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், தமிழகத்தில், 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, "கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மழை பாதிக்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மழையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.

எந்தெந்த நாட்களில் எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்பதை வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பேரிடர்களைக் கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கனமழை, மிக கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Revenue Administration Commissioner SK Prabhakar letter send to districts collectors for rain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->