த.வெள்ளையன் மறைவு எதிரொலி : தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கடைகள் அடைப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் மறைவயொட்டி, இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர்கள் சங்க பேரவை மற்றும் வணிகர்கள் சங்க பேரமைப்பினர் அறிவித்து உள்ளர்.


சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் நேற்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்நிலையில், வெள்ளையன் மறைவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல்  2 நாட்களுக்கு கடை அடைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் என்று வணிகர்கள் சங்க பேரமைப்பினர் அறிவித்து உள்ளனர்.

அதன்படி,  மறைந்த வெள்ளையன் உடலுக்கு  மரியாதை செலுத்தும் விதமாக  இன்று தமிழ்நாட்டின்  வட மாவட்டங்களில் உள்ள கடைகள் அடைக்கப்படும் என்றும், 
தொடர்ந்து, அவரது உடல் நாளை சொந்த ஊரான திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதால், நாளைதென் மாவட்டங்களில் உள்ள கடைகள் அடைக்கப்படும்  என்று வணிகர்கள் சங்க பேரமைப்பினர் அறிவித்து உள்ளனர்.

தொடர்ந்து வெள்ளையன் உடல் பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டு, தென்மாவட்ட மக்கள் மற்றும் வணிகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டு, பின்னர் நாளை மாலை அவரது சொந்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மேலும்  வெள்ளையன் மறைவிற்கு தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reverend of T Vellayan death Shops closed for 2 days in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->