விவசாயியிடம் பணம் பறித்த ரௌடிகள்! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை.!
Robbery arrest
வேலூர் மாவட்டத்தில் விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடிகளை காவல்துறையினர் விரைந்து கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், பெருமுகையில் வசித்து வரும் விவசாயி வெங்கடேசன். இவர் நேற்று மாலை 6 மணி அளவில், பெருமுகை அரசு பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் வெங்கடேசனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 2,000 ரூபாய் பறித்துச் சென்றனர்.
இதனையடுத்து வெங்கடேசன் நடந்த சம்பவத்தை சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விரைந்து சென்று விசாரனை நடத்திய காவல்துறையினர், பணம் பறித்த ரவுடிகளான சூரியகுளத்தைச் சேர்ந்த பாருக் மற்றும், ஆர்.எஸ்., நகரை சேர்ந்த தனுஷ் ஆகியோரை கைது செய்தனர்.