டி20 தொடரை கைப்பற்றி ஜிம்பாப்வே அணி அபாரம்!
Zimbabwe win T20I series
அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரை ஜிம்பாப்வே கைப்பற்றியது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயர்லாந்து கிரிக்கெட் அணி1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் அயர்லாந்தும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வேவும் கைப்பற்றி இருந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது .
முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
அப்போது அதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து மழை காரணமாக இந்த போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது . அதனை தொடர்ந்து தொடக்கத்தில் தடிவான்சே ரெமானி 7 ரன்களும், பிரையன் பென்னட் 1 ரன்களும் , வெஸ்லி மாதேவேரே ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் தொடர்ந்து வந்த சிக்கந்தர் ராசா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார் .பின்னர் அவர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .கடைசியாக இறுதியில் ஜிம்பாப்வே 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. இதில் அயர்லாந்து அணியில் கிரேக் யங், கரேத் டெலானி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அதனை தொடர்ந்து 143 ரன்கள் இலக்குடன் அயர்லாந்து அணி விளையாட இருந்தது .
அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டது .மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 1-0 என ஜிம்பாப்வே தொடரை கைப்பற்றியது.