நேருக்கு நேர் மோதி விபத்து! குலதெய்வ கோயிலுக்கு சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த கொடூரம்!
Kulithalai Government bus unexpectedly collides with car in accident
குளித்தலை அருகே இன்று அதிகாலை அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஐந்து பேர் பலி.
கோவை மாவட்டம், குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் உள்ள தனது குலதெய்வ கோயிலுக்கு நேற்று இரவு காரில் சென்றுள்ளனர்.
இதையடுத்து கார், கரூர் மாவட்டம் குளித்தலை கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென அறந்தாங்கிலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, எதிர்பார விதமாக காரின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று, தீயணைப்பு துறையினர் உதவியுடன் 5 பேரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். இந்த கோரச் சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kulithalai Government bus unexpectedly collides with car in accident