தாம்பரத்தில் அதிர்ச்சி : ஓசி பால் மற்றும் பணம் கேட்டு ரவுடிகள் தாக்குதல் - உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!! - Seithipunal
Seithipunal


தாம்பரம் அருகே ஆவின் பாலகத்தில் ஓசி பால் கேட்டும், கல்லாப் பெட்டியில் உள்ள பணத்தை தருமாறும் மிரட்டிய ரவுடி கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 


தமிழகத்தில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் உள்ள ஆவின் பாலகம் ஒன்றில் ரவுடிகள் கும்பலாக வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் சண்முகவள்ளி என்பவர் நடத்தி வரும் ஆவின் பாலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 4)  இரவு சிலர் பால் வாங்குவதற்காக வந்துள்ளனர். ஆனால் 5 பால் பாக்கெட்டுகளை வாங்கிய அந்த கும்பல், அதற்கான பணத்தை தராமலும், மேலும் கல்லாப் பெட்டியில் உள்ள பணத்தைக் கேட்டும் அந்த ஆவின் பாலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

மேலும் இனி நாங்கள் எப்போது வந்தாலும் இலவசமாகத் தான் பால் பாக்கெட்டுகளைத் தரவேண்டும் என்றும் மிரட்டிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆவின் பாலக உரிமையாளர் சண்முகவள்ளியின் கணவர் சாத்தையா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். 

இதையடுத்து போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் அந்த ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rowdy Gang Demanded Milk And Money in Avin Milk Station in Tambaram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->