சென்னை பல்கலையில் 2வது முறை கொள்ளை.!! மர்ம நபர்களுக்கு காவல்துறைவலை வீச்சு.! - Seithipunal
Seithipunal


சென்னைப் பல்கலைக்கழகம் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளையொட்டி 10 நாள்கள் விடுமுறை அவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டபோது கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. பல்கலைக்கழக வளாக நிர்வாக இயக்குநர் அறை, பல்கலைக்கழக அலுவக அறை, நூலகம், தகவல் அறிவியல் துறை மற்றும் இந்திய இசை துறையில் இருந்த கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள், பேராசிரியர்களின் உடைமைகள், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணம் ஆகியவை கொள்ளை போய்யுள்ளது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரசணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டோரின் எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. குற்றவாளிகள் கொள்ளையடித்ததோடு பொருள்களையும் சேதப்படுத்தியதால், மர்ம நபர்களின் நோக்கம் வேறு எதுவும் உள்ளதா என்ற நோக்கத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு இதேபோல் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs2 lakhs worth thinks stolen from Chennai University


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->