நாள் குறித்த உச்சநீதிமன்றம்! பட்டியலிடப்பட்ட தமிழக அரசின் மேல்முறையீடு மனு!  - Seithipunal
Seithipunal


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் பேரணி நடத்துவதற்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீடு மனு வரும் வெள்ளி கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, 

கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் பேரணி நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. 

இதற்கு காவல்துறை அனுமதி மறுக்கவே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த  வழக்கின் விசாரணை முடிவில் பல நிபந்தனைகளை விதித்து ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவை தமிழக காவல்துறை செயல்படுத்தாத நிலையில், தமிழக காவல்துறையின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஆர்எஸ்எஸ் தொடுத்தது. 

மேலும், ஆர்எஸ்எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கினை விசாரணை செய்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பேரணி நடத்த அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்தால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும்" என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது. 

இந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 3) விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RSS Rally TNGovt SC Case Friday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->