ருத்ர தாண்டவத்தை பார்த்து யாருக்கு பயம் ஏற்படும்?.. அரசியல் கட்சி தலைவர்கள் மனதார பாராட்டு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இயக்குனர் மோகன் ஜி சத்ரியன் ருத்ர தாண்டவம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில், ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, இயக்குனர் மற்றும் நடிகர் கவுதம் வாசுதேவ் மேனன், தம்பி ராமையா, ராதாரவி, மாளவிகா அவினாஷ், மாரிமுத்து, ஒய் ஜீ மகேந்திரன், மனோபாலா, ராம்ஸ், ஜெயம் எஸ்.கே கோபி, தீபா, காக்கா முட்டை விக்னேஷ் உட்பட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜூபின் இசையமைத்து இருக்கிறார். இதுவரை படத்தின் ட்ரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில், இன்று இந்த படத்தை தமிழக அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு சிறப்பு காட்சி காண்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக இன்று பாஜக, இந்து முன்னணி, புதிய தமிழகம் உட்பட சில சமுதாய தலைவர்களும் படத்தை பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் அவர்கள் தெரிவித்தாவது,

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா: 

இன்றைய தினம் இயக்குனர் மோகன் ஜி அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள உண்மையான ருத்ர தாண்டவத்தை பார்த்தோம். சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல "It has Got Educational Value Also" என்பதை மக்களுக்கு புரியச்செய்து நல்வழிப்படுத்துவதற்கான முயற்சி. சமூக ரீதியாக, சட்ட ரீதியாக.. 18 வயதுக்கு முன் ஏற்படுவது காதலே அல்ல., அது ஈர்ப்பு. இதனால் அது ஒரு படம் அல்ல பாடம். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பன் என்ற முறையில், எனக்கும் மிகப்பெரிய கவலை ஒன்று உள்ளது. 

இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதால் எவ்வுளவு பெரிய சீரழிவு ஏற்படுகிறது என்பதை இப்படத்தில் கூறி இருக்கிறார்கள். 30 வருடங்களுக்கு முன்னதாக தெருக்களில் முக்கோண விளம்பரம் பார்த்தோம். இன்று செயற்கை கருத்தரிப்பு மையத்தை பார்க்கிறோம். வரும் காலத்தில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரிக்க மதுவும், போதையும் மிகப்பெரிய காரணமாக அமையும். இந்த போதையால் "There may be Recreation, but there will not be procreation" என்பதை இளைஞர்களுக்கான புரிய செய்வதற்கான நல்ல படம். 

ஒருவர் மதம் மாறிவிட்டால் இந்து மத ஜாதி பெயரை பயன்படுத்த முடியாது. இதனை என்னைப்போன்ற ஆட்கள் தெருவுக்கு தெரு 10 வருடங்கள் கத்தினாலும், விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இந்த படத்தின் மூலமாக நல்ல விழிப்புணர்வு கிடைக்கும். இதோடுமட்டமால், மனமாற்றம் இல்லாத மதமாற்றம் ஏமாற்றம் தான். நான் எப்படி பிறந்தேனோ அப்படியே சாக விரும்பிகிறேன் என்று கூறிய தாயின் வார்த்தை, சரியான வார்த்தை. இது என்னுடைய வார்த்தை அல்ல. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகுதியில் கலவரம் நடக்கையில், நீதியரசர் வேணுகோபால் கமிஷன் அரசால் அமைக்கப்பட்டது. வேணுகோபால் யார் என்றால் நம்பர் 1 ஈ.வெ. இராமசாமி சீடர். அவர் சனாதனவாதி கிடையாது. பக்கா பெரியாரிஸ்ட். அவரது அறிக்கையில், மதம் மாற்றுவார்கள் தங்கள் மதத்தின் பெருமையை கூறி மதம் மாற்றுவது கிடையாது. பிற மதங்கள் குறித்து இழிவுபடுத்தி கூறி பேசி மாற்றுகிறார்கள். So It Tears a Social Fabric. தமிழகத்தில் பெரியாரிஸ்ட், முன்னாள் நீதிபதி கொடுத்த கமிஷன் அறிக்கையில், மதம் மாற்றம் தடை செய்யப்பட வேண்டும் என அறிக்கை கொடுத்துள்ளார். 

எனக்கு பெரிய ஆச்சரியம். மோகன் ஜி அவர்களும் சரி., அருமை சகோதரர் ராதா ரவி மிகசிறந்த நடிகரின் மகன் என்பதை மீண்டும் நிரூபணம் செய்துள்ளார். ருத்ர தாண்டவம் திரைப்பட நடிகர்கள் அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்கள். சமூகம், ஒழுக்கம், சட்ட ரீதியாக நமக்கு பாடத்தை கொடுத்துள்ள மோகன் ஜி அவர்களுக்கும், அவருடன் பணியாற்றியவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. அவர்கள் மிகசிறந்த தேசிய கடமையை செய்துள்ளார். சில நேரங்களில் இவ்வுளவு விஷயங்கள் உள்ளதே, இது Documentary ஆக பதிவிடும் போது, Liveless ஆக சென்றுவிடுமே என்று பயமே வேண்டாம். ஆரம்பம் முதல் முடிவு வரை சிறப்பாக படம் உள்ளது. படம் முழுவதும் விறுவிறுப்பு. திரௌபதியை போல பலமடங்கு மக்கள் வரவேற்பை பெரும். எனது வாழ்த்துக்கள். 

கதையில் உள்ள தலைமை காவல் அதிகாரி ஜோசப் கதாபாத்திரம் கிருத்துவ மதத்தை பெருமைப்படுத்தி இருக்கிறது. அவர் தன்னை தியாகம் செய்து, உயிரே போனாலும் பரவாயில்லை என்று கூறி, நியாயத்தின் பக்கம் இருக்கிறார். அவரை இப்படம் பெருமைப்படுத்தி இருக்கிறது. யாரையும் எங்கும் இழிவுபடுத்தி படம் எடுக்கவில்லை. ஆனால், சரக்கு மிடுக்கு பேச்சுக்கள் வாயிலாக சாதாரண பிரச்னையை சட்டம் ஒழுங்கு ஜாதி பிரச்சனையாக மாற்றியவர்களை எச்சரித்து இருக்கிறது. சட்டம் ஒழுங்கை ஜாதி பிரச்சனையாக மாற்றி வாக்கு வாங்கி அரசியலை தோலுரித்து இருக்கிறது. ஊடகவியியலார்கள் TRP Rating-க்காக செய்யும் வேலையை மேலோட்டமாக காட்டி இருக்கிறார். Very Good Educational Movie.

நான் கேட்கிறேன்., தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடை பெரும்படுத்த விரும்பினால் முதலில் இராஜஇராஜசோழனை கூறி பெருமை பேசுவோம். அசோக பேரரசை விட மிகப்பெரிய பேரரசை ஆண்ட இராஜஇராஜசோழனை பற்றி இழிவாக பேசியவர்கள் திரையுலகில் இருக்கிறார்கள் அல்லவா?. அவர்களின் படத்தை யார் பார்ப்பார்கள்?. தமிழ் இன விரோதிகள், தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்பவர்கள், தமிழ் மொழியை படிக்காமல் மனைவியுடன் ஆங்கிலத்தில் பேசு என்று சொல்பவர்களிடம் மட்டும் பார்ப்பார்கள் என கேள்வி கேட்பீர்களா?. 

இந்த நாட்டினை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் ருத்ர தாண்டவத்தை பார்ப்பான். இது Hit Movie ஆக கட்டாயம் அமையும். Dont Dry To Divert . உப்பு உண்டவன் தண்ணி குடிப்பான், தப்பு செய்வதவன் தண்டனை அனுபவிப்பான். இந்த படத்தில் சொல்லியுள்ள போதை பழக்கம் சமூகத்தை, இளைஞர்களை கெடுக்கிறது எனபதை நீங்கள் மறுக்கிறீர்களா?. நீங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறீர்கள். நன்றி.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி : 

பொதுவாக நான் திரைப்படங்களை பார்க்க செல்வது கிடையாது. திரைப்படத்தால் மிகப்பெரிய அளவுக்கு சாதனை செய்ய இயலும் என்று நம்பக்கூடியவனும் கிடையாது. கடந்த காலங்களில் திரைப்படங்களை அதிகளவு விமர்சனம் செய்தவன் நான். 99 % கேடான விஷயங்களை காண்பித்துவிட்டு, இறுதியில் 1 % இல் நல்லது செய்வது போல திரைப்படங்கள் இருக்கும். திரைப்பட செய்திகள், கருத்துக்கள், பாடல்கள் எப்படி கேடுகளை ஏற்படுத்தி உள்ளது என்பதை நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். கடந்த வாரம் அன்பு சகோதரர் மோகன், ஜெ.எஸ்.கே கோபி அழைத்து படத்தை பார்க்க கோரிக்கை வைத்தார்கள். இன்று வந்துள்ளேன். 

இந்த படத்தின் கருவாக, மிக முக்கியமாக போதை பொருளுக்கு எதிராக படத்தின் முழு கருத்தையும் நகர்த்தி இருக்கிறார். இன்றுள்ள இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாக கூடாது. அடிமையாவதால் குடும்பம், சமுதாயம் எப்படி சீரழிகிறது?. இந்த போதைப்பொருள் மூலமாக ஏற்படும் சண்டைகள் என்பதை படமாக எடுத்துள்ளார். இதனை பாடமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக PCR என்ற Protection of Civil Rights Act போலியாக எப்படி உபயோகிக்கிறார்கள்? மதமாற்றம் குறித்து பேசி இருக்கிறார். போதைப்பொருள் தமிழகத்தில் பல்வேறு பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் இருந்து ரூ.21 கோடி மதிப்பில் தமிழகத்திற்கு போதைப்பொருள் வந்துள்ளது என்றால், நாம் இளைஞர்கள் எப்படி மாறியுள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும். 

புதிய தமிழகத்தை பொறுத்த வரை PCR பயன்படுத்த கூடாது என நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இந்தியாவில் பிறந்தவர்கள் உயர்த்தவரும், தாழ்ந்தவரும் கிடையாது. அப்படி உருவான கருத்தை உடைக்க வேண்டும். அதற்காக ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு என்ற போர்வையை போர்த்தி பேசுவதில் விருப்பம் கிடையாது. அதனால் தான் தேவேந்திர குல வேளாளர் SC பட்டியலில் இருந்து வெளியேற போராடி வருகிறேன். அண்ணன் எச்.ராஜா குரல் கொடுத்தால் விரைவில் கோரிக்கை நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன். படக்குழு அனைவருக்கும் நன்றி. 

இந்து மக்கள் முன்னணி கட்சி அர்ஜுன் சம்பத் : 

திரு. மோகன் ஜி அவர்களின் துணிச்சலுக்கும், திரைப்பட குழுவின் நேர்மை, அக்கரைக்கு பாராட்டுக்கள். மிகுந்த துணிச்சலுடன் படத்தை தயாரித்து இருக்கின்றனர். அண்ணல் அம்பேத்கார் ஒட்டுமொத்த தேசத்திற்கும் தலைவர் என்பதை உணர்த்தி இருக்கின்றனர். அவர் ஜாதி தலைவர் அல்ல என்பதை உணர்த்தி இருக்கிறார். அண்ணல் அம்பேத்காரின் பெருமையை, சட்டத்தின் மகிமையை வெகு சிறப்பாக படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். பட்டியல் இன மக்கள் எந்த அளவுக்கு நேர்மைக்கும், நியாயத்திற்கும் துணை நிற்கிறார்கள் என்பதை உணர்த்தும் படம். இது ஜாதி, மதம் உணர்வை தூண்டும் படம் அல்ல. மாணவர் சமூகத்தை சீரழிக்கும் போதை பழக்கத்தால் பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள். இந்த படம் யாராலும் தொட்டுப்பார்க்க இயலாத திரைப்படம். 

சமீபத்தில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து தெளிவாக சொல்லியுள்ளார்கள். மிகவும் அற்புதமாக படத்தில் பல விஷயங்களை காட்சிப்படுத்தியுள்ளார்கள். நல்ல விழிப்புணர்வு படம். நல்ல பாடம். திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள், பணியாற்றியுள்ளார்கள். இந்த படம் பெருவெற்றியை நிச்சயம் பெரும். இந்த படம் வாயிலாக ஜாதி, மத பிரச்னையை தூண்டி விட்டு அரசியல் செய்து குளிர் காயலாம் என நினைக்கும் பலருக்கும், அவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். கிருத்துவ மோசடி மதமாற்று சக்திகள், ஏமாற்று வேலை செய்பவர்கள் படத்தில் கதாபாத்திரமாக வந்துள்ளார்கள். 

நியாயமான, தேசபதி உள்ள, நம்முடன் உண்மையில் சகோதத்துவதுடன் பழகும் நபர்களை பெருமைப்படுத்தும் விதமாக படம் அமைந்துள்ளது. இந்த படம் மதம், மத நம்பிக்கை, யேசுநாதர் என யாரையும் அவமதிக்கவில்லை. அந்த கட்சிகளும் இல்லை. மதம் மாறுவது இஷ்டப்பட்டு மாறுவது சரியாக உள்ளது. மோசடியாக மதம்மாற்றம், பிராடு வேலையை சரியாக எடுத்து காண்பித்துள்ளார்கள். மதம் மாறிய பின்னரும் இந்து என்ற அடையாளத்தை வைத்து தவறாக பயன்படுத்துபவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. 

வேலூர் இப்ராஹிம் - பாஜக :

ருத்ர தாண்டவம் திரைப்படம் மிகச்சிறப்பான முறையில் வடிவமைத்த மோகன் ஜி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த படத்தில் 3 முக்கிய கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருளை சமூகம் பயன்படுத்தினால் எதிர்வரும் தலைமுறை மிகப்பெரிய சீரழிவை சந்திப்பார்கள் என்ற ஆழமான கருத்தை விதைத்து இருக்கிறார்கள். பெண்கள் 18 வயது முடிந்துவிட்டால் தாங்கள் விரும்பியவர்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற நிலையை தவறாக பயன்படுத்தி, ஆணின் தவறான வழிப்போக்கினால் அவர்கள் வீழ்த்தப்படுகிறார்கள். பல்வேறு குடும்பத்தில் பல சீரழிவுகள் நடக்கிறது. இதனால் தான் ஆணவக்கொலையின் அடித்தளம் அமைக்கப்படுகிறது. 

ஒவ்வொரு பெண்களும், கல்லூரியில் பயிலும் பெண்களும் சிந்தித்து தங்களின் திருமண வாழ்க்கையை தேர்வு செய்ய வேண்டும். பெற்றோரின் அனுமதியோடு திருமணத்தை செய்ய வேண்டும், அதுவே சீரிய சிறந்த வாழ்க்கையை அமைக்கும் என்ற கருத்தை உணர்த்தி இருக்கிறார்கள். கிருத்துவ மக்கள் சம்பந்தமான கருத்து தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் படி, ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய அடிப்படையில் விரும்பிய மதம், வழிபாட்டுமுறையை பின்பற்றி நடந்து கொள்ளலாம். இது அரசியல் அமைப்பு கொடுத்த அனைவருக்குமான அதிகாரம். 

ஆனால், இந்த அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காண்பித்து இருக்கின்றனர். குறிப்பாக இந்து மதத்தை சார்ந்தவர் இஸ்லாமியராக மதம் மாறுகிறார்கள் என்றால், மதம் மாறுவது என்றால் மனமற்றதால். ஆசை வார்த்தை கூறி, பணம் தருகிறோம், கல்லூரி படிப்பு வாய்ப்பு தருகிறோம், பிற மதத்தை இழிவுபடுத்தி பேசுதல், ஏழ்மையை பயன்படுத்தி மதம் மாற்றம் செய்பவர்களை சுட்டிக்காட்டி படம் எடுக்கப்பட்டுள்ளது. மதம் மாறிவிட்டு, வேலைவாய்ப்புக்காக இந்து மதத்தினர் என்று நடித்தால் அவர் கிருத்துவ மதத்தை இழிவுபடுத்துகின்றனர். இதனை சுட்டிக்காட்டி மிக அழகிய முறையில் படம் எடுத்துள்ளனர். சிறுபான்மை இன மக்கள் கட்டாயம் இதனை வரவேற்பார்கள். சமூக நல்லிணக்கத்திற்கு சிறந்த உத்தரமானாக படம் அமையும். 

திருமாறன் ஜி - தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் : 

படத்தை பார்த்த பலரும் கூறுவார்கள் வித்தியாசமான படம்.. இதுதான் உண்மையினாலேயே வித்தியாசமான படம். பல்வேறு விஷயங்களை சுருக்கமாக திருக்குறள் கூறுவதை போல, இரண்டு வரிகளில் சமூக சீர்திருத்தத்தை கூறியுள்ளார்கள். சமீப காலமாக ஜாதிய வன்மத்துடன் படம் எடுக்கிறார்கள். அந்த ஜாதிக்காரன் அப்படி செய்தான், இந்த ஜாதிக்காரன் அடிமைப்படுத்தி வைத்திருந்தான் என்று படம் எடுக்கிறார்கள். இது சகோதரத்துவத்தை வளர்க்குமா?. இந்த படத்தில் பல்வேறு விஷயங்களை பேசியிருக்கிறார். பட்டியலின மக்களும் பிற சமூகமும் இணைந்து வாழும் விஷயத்தை சிறந்த காட்சியாக பதிவு செய்துள்ளார். அம்பேத்கார் குறிப்பிட்ட சமூக தலைவராக இருந்தவர் என்று அடையாளப்படுத்த நிலையில், இந்த படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் அம்பேத்கார் நமக்கும் தலைவர் என சொல்லும் அளவுக்கு படத்தில் கருத்துக்களை கூறியுள்ளார்கள். 

அம்பேத்காரை வைத்து எப்படி அரசியல் செய்கிறார்கள்?. தேசிய தலைவரை எப்படி ஜாதிக்குள் அடைத்து வைத்துள்ளார்கள்?. அவரின் பால் தமிழகத்தில் எப்படி அரசியல் செயல்படுத்தப்படுகிறது? என்பதை கூறியுள்ளார்கள். தவறாக புனையப்பட்டுள்ள பல உண்மைகளை கூறியுள்ளார்கள். இது சமூக சீர்திருத்த படம். படத்தை திரையரங்கில் சென்று குடும்பத்துடன் பாருங்கள். ஒவ்வொரு பெண்பிள்ளைகளை பெற்றவர்களும் பாருங்கள். 18 வயதாகிவிட்டது என்றால் என் பிள்ளை எனக்கு சொந்தமில்லை என்ற கருத்து நிலவ தொடங்கிவிட்டது. நாம் பல பிரச்னையை சந்திக்கிறோம். எவ்வுளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும், காவல் நிலையத்தில் 18 வயதாகிவிட்டது என்றால் திருமணம் செய்து வைக்கிறார்கள். அது அனைத்தும் தவறு. உங்களுக்கும் குடும்பம், வாழ்க்கை உள்ளது என்பதை தெளிவாக உள்ளார்கள். 

இது எந்த மதத்திற்கும், ஜாதிக்கும் எதிரான படம் இல்லை. எந்த ஜாதியையும் தூக்கி பிடிக்கவில்லை. பல இயக்குனர்கள் பேச தயங்கியதை கருத்துக்களாக வைத்துள்ளார்கள். வியாபார நோக்கத்துடன் பல இயக்குனர்கள் உள்ள மத்தியில், தம்பி மோகன் ஜி சமூகத்திற்காக சிறந்த படத்தை கொடுத்துள்ளார். இதனைப்போல பல படங்கள் கொடுக்க வேண்டும்.  

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு எச்.ராஜா பதில் அளித்தார். அந்த தொகுப்பில், 

செய்தியாளர்கள் கேள்வி : தமிழ் சமுதாயத்தில் இந்து மதத்தை கொண்டு வருகிறார்கள். இதனை எப்படி பார்க்கிறீர்கள்.... 

எச். ராஜா 

உங்களுக்கு தமிழ் முழுவதுமாக தெரியுமா?. தமிழ் மொழி வாழ்க என்று சிறப்பு "ழ"-வை கூற தெரியாத பலரும் தமிழ் பேசுகிறீர்கள். இந்துவும் - தமிழும் வெவ்வேறு என சொன்னது யார்?. "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது வேதம் நான்கிலும் மெய்பொருள் ஆவது நாதன் நாம் நமச்சிவாயமே" இந்து இல்லையென்றால் தமிழ் எங்கிருந்து வந்தது. ஊடகவியலாளர்கள் தமிழ் வேறு, இந்து வேறு என்று பேசி மதம் மாற்றத்திற்கு துணை போக வேண்டாம்.

செய்தியாளர் : நாம் தமிழர் சீமான் கோரிக்கை வைக்கிறார்....

எச். ராஜா : Who Is Seeman. சீமானின் அன்னை அன்னம்மா தமிழச்சியா?. 

செய்தியாளர் : இல்லையா?. 

எச். ராஜா : இல்லை. She is a மலையாளி. அட என்ன பீகாரி என சொல்கிறான் ஒரு முட்டாள். நான் பச்ச தஞ்சாவூரான். அதனால் தமிழ் - இந்து வேறுபடுத்தி பேச வேண்டாம். 

செய்தியாளர் : ஆரியர்கள் வந்ததற்கு பின்னர் தான்....

எச். ராஜா : எந்த பய சொன்னது ஆரியர் வந்ததற்கு பின்னர் தான். ஆரியர் குறித்து அண்ணல் அம்பேக்த்தர் என்ன சொல்கிறார் என்றால், "The Right Place for the Mind of Aryan Invention is The Dust Pin" என்று கூறுகிறார். சுப. வீரபாண்டியன் மூளை Dust Pin ஆக போய்விட்டது என்றால், அது ஆரியன் Invention ஆ?. இதில் ஆரியன் எங்கு வந்தான்?. என்ன ஆதாரம் இருக்கிறது?. பொய்களை பரப்ப வேண்டாம். அதுக்கு துணை செல்ல வேண்டாம். சுப. வீயே அறிவாலயத்தில் வாயிலில் இருக்கும் பிச்சைக்காரன். 

செய்தியாளர் : சம்ஸ்கிருத மொழி வந்த பின்னர் தமிழ் மொழி அழிக்கப்படுகிறது. ஆதி காலத்தில் இருந்து தமிழ் - சமஸ்கிருதம் பிரச்சனை உள்ளது. 

எச். ராஜா : சமஸ்கிருதத்துக்கும் - தமிழ் மொழிக்கும் என்று மோதல்?. கால்டுவெல் கடந்த 1838 ஆம் வருடம் வந்த பின்னர், கால்டுவெல் புத்தர் பரப்பும் பொய்க்கு நீங்கள் உடந்தையா?. ஆரிய படையெடுப்பு என்கின்ற கட்டுக்கதைக்கு சரியான இடம் குப்பைத்தொட்டி. நண்பரே உங்களின் மூளையை குப்பைத்தொட்டி ஆக்க வேண்டாம். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rudra Thandavam Movie Review by H Raja Krishnasamy Arjun Sampath Vellore Ibrahim Full Speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->