தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்றுயுடன் நிறைவு!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்றுடன் நிறைவடைவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு, ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவு, மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டம் மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்டும் மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதியும், கடைசி கட்ட ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் மூன்றாம் தேதியும் நடைபெற்ற முடிந்தது.

 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தது. தேர்தல் பறக்கும்படியினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான பணம் மற்றும் பொருளை பறிமுதல் செய்துள்ளனர். தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் சோதனை செய்து வந்தனர்.

 இந்த நிலையில் கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் நடத்தை விடுமுறைகள் நிறைவடைவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை முதல் அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rules of conduct of elections complete with today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->