'நீர்வழி படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது! - Seithipunal
Seithipunal


24 மொழிகளில் சிறந்த புத்தககங்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த நாவலாக 'நீர்வழிப் படூஉம்' தேர்வு செய்யப்பட்டு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு வரும் 2024 ஆம் ஆண்டு, மார்ச் மாதம், 12-ம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன், 'தேவிபாரதி' என்ற புனைப்பெயரில் கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். 

இவர் எழுதிய நாவல்தான் 'நீர்வழிப் படூஉம்'. இந்த நாவலில் குடி நாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்வியலையும், ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியையும், அவனுடன் சமூகம் கொள்ளும் உறவைப் பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.

தனது படைப்புக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இந்த விருது உத்வேகத்தைத் தரும் என எழுத்தாளர் ராஜசேகரன் என்ற 'தேவி பாரதி' தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் தேவி பாரதி. நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல், நட்ராஜ் மகராஜ் உள்ளிட்ட நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களுக்கு திரைக்கதை, வசனமும் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தேவி பாரதி.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sahitya Akademi Award Neervazhi Padooum Devi Bharathi 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->