வரும் 1 ஆம் தேதிமுதல் ஹெல்மெட் கட்டாயம் - புதிய அறிவிப்பை வெளியிட்ட மாநகர போலீஸ் கமிஷனர்.!
salem Helmet mandatory
சேலம் மாநகராட்சியில் வரும் 1 ஆம் தேதிமுதல் ஹெல்மெட் கட்டாயம் என்று, மாநகர போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணியாமல் செல்வதால், சாலை விபத்துகளின்போது, தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
மேலும், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமல் பயணிந்து வருகின்றனர். இதனையடுத்து, சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வோர் மீது அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வருகிற 1-ந் தேதி முதல் சேலம் மாநகராட்சி முழுவதும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ெஹல்மெட் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா தெரிவித்திருப்பதாவது, "வரும் 1-ந் தேதி முதல் சேலம் மாநகராட்சியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் ெஹல்மெட் அணிந்து விபத்தை தடுத்திட போலீஸ் துறைக்கு ஒத்துைழப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.