சாதி மறுப்பு காதல் திருமணம்! 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை! அதிரும் பின்னணி! - Seithipunal
Seithipunal


சேலம் அருகே காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த பெண், திருமணம் ஆன 4 மாதத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்து உள்ள ஓலைப்பட்டி நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் நித்யா.

21 வயதாகும் இவரும், தாரமங்கலம் பகுதியை சேர்ந்த தினேஷ் (23 வயது) என்பவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்ற நிலையில், நித்யா தனது கணவன் வீட்டில் வாழ்ந்து வந்தார். 

கடந்த ஒரு மாதமாக கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் தனி குடுத்தனம் செல்ல வேண்டும் என்று நித்யா தனது கணவனிடம் வலியுறுத்தி வந்ததாகவும், சம்பவம் நடந்த அன்று இரவு இந்த விவகாரம் குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு நித்தியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அதிர்ச்சி அடைந்துள்ளார் கணவன் தினேஷ்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், நித்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நித்யாவின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் ஆகி 4 மாதங்களில் நித்தியா தற்கொலை செய்து கொண்டுள்ளதால் இந்த சம்பவம் குறித்து மேட்டூர் உதவி ஆட்சியர் தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem love marriage Nithya suicide case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->