மூதாட்டி என்று கூட பார்க்காமல் ரூ.27,000 திருடி சென்ற மர்மநபர்கள்.!
salem mettu theru robbery to old lady
சேலம் மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி மல்லிகா. ராமநாதன் சென்னை தலைமைச் செயலகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்று பின்னர் இறந்துவிட்டார்.
இதனால் மல்லிகாவிற்கு அரசின் பென்சன் பணம் வருகிறது. இவர் கணவரின் பென்சன் பணம் ரூ.27 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு பேருந்தில் அஸ்தம்பட்டியில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

பேருந்து நிலையத்திற்கு வந்து பார்த்த போது மல்லிகா எடுத்து வந்த பென்சன் பணம் ரூ.27 ஆயிரம் மாயமானது தெரியவந்தது. பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ.27 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மல்லிகா இது குறித்து சேலம் டவுன் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
English Summary
salem mettu theru robbery to old lady