வேலூரை தொடர்ந்து சேலம்! அதிரவைக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள்!
Salem new Born Baby Theft
அண்மையில் வேலூர் மருத்துவமனையில் குழந்தை திருடப்பட்டு மீட்கப்பட்ட நிலையில், இன்று சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு அரங்கேறியுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில், பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை திருட்டு அரங்கேறியுள்ளது.
மாஸ்க் அணிந்த பெண் ஒருவர் குழந்தையை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையின் 2வது தளத்தில் இருந்து குழந்தையை பெண் திருடி சென்றுள்ளார்.
சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம், குழந்தையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.
நம்முடைய அரசு பள்ளிகளில் என்ன அடிப்படை வசதிகள் இல்லை? ஏன் மாணவர் சேர்க்கை குறைகிறது? நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு கேள்வி!
தமிழக அரசு அதிகாரிகளின் மெத்தனமான செயல்களால் தான், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து உள்ளதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் நம்முடைய அரசு பள்ளிகளில் என்ன அடிப்படை வசதிகள் இல்லை? அழகான கட்டிடம், சிறப்பான ஆசிரியர்கள் உள்ளனர்.
ஆனாலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் தான் சேர்க்கிறார்கள். அப்படி என்றால் இவ்வளவு அரசு அதிகாரிகள் இருந்து என்னதான் பயன்? என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அதிகாரிகளை பார்த்து கேள்வி எழுப்பி உள்ளார்.
English Summary
Salem new Born Baby Theft