சேலம் | அடுத்தடுத்து உணவகங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


நாமக்கல்லில் கடந்த 10 ஆம் தேதி சவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்தார். மேலும் 43 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் சோதனை நடத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார். 

அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். 

அது போல் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையில் அதிகாரிகள் நேற்று 33 உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். 

இதில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 182 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு 10 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளுக்கு போலீசார் மூலம் சீல் வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

சேலம் மாநகர் பகுதியில் உள்ள பல உணவகங்களில் இன்று 2வது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் புறநகர் மாவட்ட பகுதிகளான ஓமலூர், தம்மம்பட்டி, மேட்டூர் போன்ற பகுதிகளில் உள்ள உணவகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த சோதனையின் போது அதிக அளவில் தரமற்ற இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் இந்த சோதனை தொடரும் என்றும் உணவகங்களில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem unhygienic restaurants Seal 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->