சேலத்தில் கொடூரம்: பட்டதாரி பெண் உடல் கருகி உயிரிழப்பு! பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


சேலம், சின்னகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு பிரபு (வயது 27) என்ற மகனும் வனிதா (வயது 23) என்ற மகளும் உள்ளனர். 

வனிதா பட்டபடிப்பை முடித்துவிட்டு 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று மாலை வனிதா வீட்டில் யாரும் இல்லாத போது சமையல் அறைக்குச் சென்று தேநீர் வைத்துக் கொண்டிருந்தபோது திடீரென கத்தி கூச்சலிட்டுள்ளார். 

அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது வனிதா உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சமையலறையில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அனைத்து, உடல் கருகிய நிலையில் இருந்த வனிதாவை மீட்டு சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வனிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வனிதாவின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் இந்த தீ விபத்து கியாஸ் கசிவினால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

பட்டதாரி பெண் தீப்பிடித்து உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem young girl burnt death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->