அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - இந்த மாதம் சம்பளம் எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் தொகை வழங்கப்படும். ஆனால், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8 புள்ளி 3 சதவீதம் போனஸ் வழங்கப்படும். 

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள தற்காலிக தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாய் கருணைத்தொகை வழங்கப்படும். இதனால், குறைந்தபட்சமாக 8,400 ரூபாயும், அதிகபட்சமாக 16,800 ரூபாயும் போனஸாக வழங்கப்படும். 2,75,670 தொழிலாளர்களுக்கு 369 கோடியே 65 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் 1-ம் தேதிக்கு பதிலாக இந்த மாதம் 28-ம் தேதி, அதாவது தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பே வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதை பற்றி விரைவில் தமிழக அரசு முடிவெடுக்கும் என்றது தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salry credited coming 28 to governent employees account


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->