267 கிலோ தங்கம் பறிமுதல் - பாஜக நிர்வாகிக்கு சம்மன்.! - Seithipunal
Seithipunal


சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், சென்னையை சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர் கடையில் பணியாற்றிய ஏழு பேருக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டிருந்தது. மேலும், வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவோரிடம் இருந்து தங்கத்தை பெற்று, சுங்க சோதனை இல்லாமல் கடத்தியது தெரியவந்தது.

இந்த நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் சபீர் அலி உள்பட 9 பேர் கைதான நிலையில், பாஜக நிர்வாகி பிருத்வி என்பவருக்கு சம்மன் அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன் படி பாஜக பிரமுகர் விசாரணைக்கு ஆஜராகுவாரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samman send to bjp executive for 267 kilo gold seized case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->