வைகோ கொடுத்த டிவிஸ்ட்! முடிவுக்கு கொண்டுவர போராடும் திமுக அமைச்சர்கள்!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் 4வது வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை, தமிழ்நாடு தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தொழிலாளர் துறை அமைச்சர், துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு இதுவரை 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.  அன்பரசன், சி.வி.கணேசன்  ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் இந்தியா தொழிலாளர்களுக்கு ஆளும் திமுகவின் கூட்டணி கட்சியான மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் செய்திக்குறிப்பில், "காஞ்சிபுரம் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் உரிமைகளைக் காக்க நடவடிக்கை மேற்கரோல்லா வேண்டும்.

சாம்சங் தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கையான ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை’ தமிழ்நாடு தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று வைகோ எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samsung Workers Protest Minister Kanchipuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->