உதயநிதிக்கு மேலும் சிக்கல்! சிபிஐ விசாரணை? உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணி பற்றி, சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சனாதன ஒழிப்பு மாநாடு நநடத்துவதற்கு பின்புலத்தில் யார் உள்ளார் யார் யார் உள்ளார்கள்? என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று, அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு கலந்து கொண்டது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. மேலும் அவர்கள் சனாதனத்திற்கு எதிராக பேசியதும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அவரின் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கை முறையாக தாக்கல் செய்தால் எடுத்து கொள்வதா? வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக திமுக அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வழக்கை, அவசர வழக்காக எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

உதயநிதியின் பேச்சு, சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் மனதை புண்படுத்தி உள்ளதாக கூறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முக்கிய பிரபலங்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் இந்த கடிதம் எழுதியிருந்தனர்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம், முறையான வழிமுறைகளை பின்பற்றி வரும் திங்கள் கிழமை முறையிட மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sanatana maanadu issue CBI Inquiry SC Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->