தமிழ்நாடு எனப் பெயர் வர காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனார் தன் இன்னுயிரையே ஈந்த நாள் இன்று!
Sankarangalinganar Tamilnadu
சென்னை மாகாணம் என்றிருந்ததை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் 76 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிரிழந்தார்.
பின்னர், பேரறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றதும் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்டது.
இந்நிலையில், தியாகி சங்கரலிங்கனாருக்கு தமிழ்நாடு நன்றிக்கடன் பட்டுள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.
அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல;
ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்!" - எனப் பேரறிஞர் அண்ணா நெக்குருகப் போற்றிய விருதுநகர் சங்கரலிங்கனார் 'தமிழ்நாடு' என்ற பெயர்பெற 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து தம் இன்னுயிரையே ஈந்த நாள் இன்று!
அந்த உத்தமத் தியாகிக்குத் தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது" என்று முதலான்ச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
Sankarangalinganar Tamilnadu