13 வயது சிறுமியை கர்ப்பமாக்குவதாக பாடிய சரவெடி சரண் சற்றுமுன் கைது.! போலீஸ் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


ஆணாதிக்கத்தனமான மற்றும் சாதியத்தையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து பாடல் பாடும் அதே "மார்கழி மக்களிசை" மேடையில் ஒரு மோசமான சம்பவத்தை ஆணாதிக்கவாதியான கானா பாடகர் சரவெடி சரண் அரங்கேற்றி இருந்தார். 

சரவெடி சரண் தனது பாடலில், "பால்வாடி படிக்கும் பொழுது குச்சி மிட்டாய் கொடுத்து, எட்டாம் வகுப்பு பாஸ் ஆனதும் வாந்தி எடுக்க வைத்தால் தான் என்ன விட்டு அந்த பெண் போக மாட்டா" என்று அந்த சரவெடி சரண் கானா பாடல் பாடுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மிகுந்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. 

அத்துடன் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.வருண் குமார் அவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்ததை தொடர்ந்து சரவெடிசரண் போலிஸாரால் தேடப்படும் குற்றவாளியானார். 

இத்தகைய நிலையில், கானாபாடகர் சரவெடி சரண்(வயது 26) தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saravedi saran arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->