எஸ்றா சற்குணத்திற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி!
Sarkunam TN Police CM Stalin order
மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் 22.9.2024 அன்று காலமான மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர். முன்னாள் பேராயர் எஸ்றா சற்குணம் (வயது 86) அவர்களது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
எஸ்றா சற்குணம் தமிழ் சமூகத்திற்கு. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தனது இறுதி நாள் வரை தொடர்ந்து சேவை ஆற்றி வந்துள்ளார்கள்.
இன்று (26.9.2024) சென்னை, கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும் அன்னாரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
English Summary
Sarkunam TN Police CM Stalin order