சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்..!! துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் குவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்களைப் பற்றி பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர் பேசும் மேடையில் ஏறுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

திமுக அமைச்சர் கீதா ஜீவனின் இத்தகைய பேச்சுக்கு தமிழக பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா கடுமையான வார்த்தைகளால் பதிலடி தந்திருந்தார். இது குறித்து பேசி அவர் "அமைச்சர் கீதா ஜீவன் அவர்களே நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது கால்கள் இருக்காது, அண்ணாமலையை பற்றி பேசும் நாக்கு இருக்காது. நீங்கள் செய்யும் ஊழலை வெளியே கொண்டு வருவோம்" என பேசி இருந்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்த தபால் தந்தி காலனியில் உள்ள பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பாவின் வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சசிகலா புஷ்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி நகர காவல் துறை கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையிலான சிப்காட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் அதிமுக நிர்வாகியை தாக்கியது போன்று திமுகவை பற்றி விமர்சனம் செய்த சசிகலா புஷ்பா வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala Pushpa house and car attacked by miscreants


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->