காலையிலேயே தமிழகத்தை பதறவைத்த சம்பவம்! தலா 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Saththur Crackers Factory fire Accident CM Stalin announce
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று (29-06-2024) காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 45), நடுச்சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி (வயது 40), வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 35) மற்றும் மோகன் (வயது 30) ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கிடையே, "பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரிவர உறுதிசெய்யப்படாதது குறித்து நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும் காட்டாச்சி நடத்தும் இந்த விடியா திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே, இதுபோன்ற தொடர் விபத்துகளும் உயிரிழப்புகளும். மெத்தனப் போக்கின் மொத்த உருவாக இருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்" என்று, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மேலும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்ப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
Saththur Crackers Factory fire Accident CM Stalin announce