சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல்! சைபர் கிரைம் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


பிரபல யூடியூப்பரான சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேசி இருந்தார். 

இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். மேலும் அவரை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை வருகின்ற 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சவுக்கு சங்கரின் சர்ச்சையான கருத்துக்கள் கொண்ட பேட்டி தொடர்பான வீடியோவை வெளியிட்ட யூட்யூப் சேனல் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மேலும் இரண்டாவது குற்றவாளியாக சேனலை சேர்த்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar interview published YouTube channel against case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->