சவுக்கு சங்கர் மீது "பெண் காவலர்கள்" தாக்குதல்? - நீதிபதி அதிரடி உத்தரவு.!!
SavukkuShankar alleged female police attack on him
பெண் காவலர்கள் குறித்து அவதூராக பேசிய வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். முன்னதாக கோவை மத்திய சிறையில் இருந்து போலீஸ் வாகனம் மூலம் திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கருக்கு முழுக்க முழுக்க பெண் போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்திற்கு ஆளான நிலையில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக நீதிபதியிடம் சவுக்கு சங்கர் முறையிட்டுள்ளார்.
கோவையில் இருந்து அடித்து வரப்பட்ட போது பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் ஏற்கனவே உடைக்கப்பட்ட தன் கை மீது மீண்டும் தாக்கியதாக நீதிபதியிடம் சவுக்கு சங்கர் முறையிட்டதை மறுத்துள்ள காவல்துறை, பெண் காவலர்களின் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜெயப்பிரதா அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கரின் கையை ஸ்கேன் செய்து அழைத்து வருமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் உத்தரவை அடுத்து சவுக்கு சங்கரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
SavukkuShankar alleged female police attack on him