கழிவுநீர் தொழிலாளிகள் மரணம்: ரூ.30 லட்சம் இழப்பீடு – உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC order for Kazhivu neer thotti maranam
கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனிதர்களை கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்த முடியாது என அரசுகள் அறிவித்திருந்தாலும், பல இடங்களில் இந்நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டெல்லி நீர் வாரியம், கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில், கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியின் போது பலியானவர்கள் தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையில், நகர நிர்வாகங்கள் தாக்கல் செய்த விளக்கங்கள் போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அடுத்த முறை தாக்கல் செய்யும் அறிக்கைகளும் சமர்ப்பிக்கும் அளவிற்கு திருப்திகரமாக இல்லையென்றால், அவற்றை அவமதிப்பு வழக்காக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.
இதற்கிடையில், கடந்த 3 மாதங்களில் கழிவுநீர்த் தொட்டிகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தொகை நான்கு வாரத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
SC order for Kazhivu neer thotti maranam