தமிழக அரசுக்கு நெருக்கடி.. தாக்குதல் நடத்தியது உண்மையா.? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி சர்ச்சை எழுப்பியுள்ள நிலையில் கேரளா மாநிலம் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் தடை விதிக்கவில்லை. இதற்கிடையே மேற்குவங்க மாநில அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழக்கூடும் என்ற காரணத்திற்காக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்தது.

இதற்கு எதிராக கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு மேற்குவங்க மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளார். இந்தியாவின் அங்கமாக தான் மேற்கு வங்க அரசும் இருந்து வருகிறது. 

இந்தியா முழுவதும் கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி திரையிடப்பட்டுள்ள நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி அதற்கான விளக்கத்தை அளிக்குமாறு மேற்கு வங்காள அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை அரசு தடை விதிக்காத பட்சத்தில் திரையரங்க உரிமையாளர்களே தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடப் போவதில்லை என்ற முடிவு எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 27 தியேட்டர்களில் கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. 

இருந்த போதிலும் மக்களிடையே வரவேற்பு குறைவு மற்றும் திரையரங்குகளில் அரங்கேற்றப்பட்ட தாக்குதலை காரணம் காட்டி திரையரங்கு உரிமையாளர்கள் இது கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட மறுத்தனர். இது தொடர்பாகவும் இது கேரளா ஸ்டோரி திரைப்பட தயாரிப்பாளர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தான விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC orders TNgovt file affidavit regarding attack on the kerala story theaters


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->