8 மாவட்டங்களில் பள்ளிக், கல்லூரிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


தென் இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கன மற்றும் அதி கனமழை பெய்து வருகிறது.

இந்த அதிகனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்கு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் கடந்த 13-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது விடுமுறை விடப்பட்டு இருப்பதால், இந்த மாவட்டங்களில் நான்கு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நடக்க இருந்த கணிதம் பாடத் தேர்வும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வு மற்றொரு நாளில் நடத்தப்படும். அதுதொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை வெளியிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வுகள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school and colleges holiday in eight districts


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->