ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு.! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 4-ம் தேதி முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுவரைக்கும் பல தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடியாத வண்ணம் உள்ளது.

தமிழக அரசு நிவாரண நடவடிக்கைகளிலும், மீட்பு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இன்றைய தினத்திற்குள் மீட்பு நடவடிக்கைகள் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளனர்.

புயல் மற்றும் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில், நாளை டிசம்பர் 11 முதல் இந்த நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளைகளும் அகற்றப்பட வேண்டும். 

அனைத்து பொதுகழிப்பறைகளும், சமுதாய கழிப்பறைகளும் சுகாதாரமான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தெருவிளக்குகள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school and colleges open tomarrow in floods affected districts


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->