#BigBreaking | நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - சற்றுமுன் வெளியான அறிவிப்பு!
School college leave Mandous Cyclone puducherry Karaikal
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து, தற்போது சென்னைக்கு 520 கி.மீ தொலைவில் உள்ளது.
இந்த புயல் புயல் கரையை கடக்கும்போது 65 - 85 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், இதன் காரணமாக வட தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த மாமல்லபுரம் அருகே நாளை இரவு ‘மாண்டஸ்’ புயல் கரையை கடக்க உள்ளதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ‘மாண்டஸ்’ புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் ( வெள்ளி, சனி, ஞாயிறு) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதேபோல் புயல் காரணமாக தமிழகத்தில் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
School college leave Mandous Cyclone puducherry Karaikal