ஆசிரியர் கொலை - பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி.

இவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில், மதன்குமார் என்ற இளைஞர் ஒரு தலை காதல் விவகாரத்தால், பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறையில் இருந்த ஆசிரியை குத்தி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது, பள்ளிக்கு விடுமுறை குறித்து அறிவித்தார். மேலும் அவர், "பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வேறு ஒரு இடத்தில் முழுமையாக கவுன்சிலிங் கொடுக்கப்படும். கவுன்சிலிங் மூலம் மாணவர்கள், ஆசிரியர்களிடையே அச்சமற்ற நிலை உருவாக்கப்படும். அதன் பிறகே பள்ளி திறக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school leave for teacher murder in thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->